தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாளை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மீண்டும் 17ம் தேதி சட்டமன்றம் கூடும். அன்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். 21ம் தேதி பட்ஜெட் விவாதங்களுக்கு பதிலுரை அளிக்கப்படும். 24ம் தேதி முதல் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களும், வாக்கெடுப்பும் நடைபெறும். ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.
இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.