Skip to content
Home » 11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில் வரும் 11ம் தேதி வரை  சட்டமன்ற கூட்டததை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

நாளை காலை  9.30 மணிக்கு பேரவை கூடியதும்,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,   காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ்  இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

8,9,10ம் தேதிகளில்   கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீது   உறுப்பினர்கள் பேசுவார்கள்.  11ம் தேதி  முதல்வர்  பதிலுரை அளிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.