தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே , அதாவது வரும் 20ம் தேதியே கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும். புதிதாக விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் நாளை காலை எம்.எல்.ஏவாக பதவி ஏற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.