தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று சாலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 20ம் தேதி தொடங்கும் கூட்டம் 29ம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு சபை கூடவும், மதியம் 1.30 மணி வரை கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாலையில் 5 மணிக்கு கூட்டத்தை தொடங்கி இரவு 8 மணி வரை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.