Skip to content
Home » ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

ஆசியா வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி…வென்ற வீரருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

திருச்சி, சுப்பிரமணியபுரம், கோனார் தெருவைச் சேர்ந்தவரும் கமலா நிகேதன் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருபவரும் DNA புரோ பிட்னஸில் பயிற்சி பெறுபவருமான தினேஷ் (17) கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மே 2 முதல் 6 முடிய நடைபெற்ற ஆசியா பவர்லிப்டிங் (வலுதூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-ஜூனியர். கிலோ எடைப்பிரிவில் 66 கலந்து கொண்டு ஸ்குவாட்டில் 232.5 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ஞ் பிரஸ்சில் 130 கிலோ எடை தூக்கி தங்கமும், டெட்லிப்டில் 235 கிலோ எடை தூக்கி தங்கமும், என மொத்தம் 597.5 கிலோ எடையைத்தூக்கியதற்காக தங்கம் என 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

சப்ஜுனியர் பிரிவில் அனைத்து எடைப் பிரிவுகளிலும் அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி

இவருக்கு ‘ஸ்டிராங்மேன்’ என விருதும் வழங்கப்பட்டது.

இவர் ஏற்கனவே நவம்பர் 2022ல் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கம் வென்றார். ஸ்ட்ராங்மேன் விருதும், டெட்லிப்டில் முந்தைய சாதனையை முறியடித்தும் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் ‘பார்ன் சூட்டர்’ சென்டரில் பயிற்சி பெற்ற இவர் நியூடெல்லியில் சென்ற மாதம் நடைபெற்ற 10 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் ஜூனியர் வேர்ல்டு சாம்பியன் தகுதிச் சுற்று T3 & T4 ல் கலந்து கொண்டு அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த அவரை பெற்றோர் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *