ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக செயல்பட்டது. இதில், அர்ஜுன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் சிவா நார்வால் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியின் முதல் தொடரில், அர்ஜுன் 97 புள்ளிகள், சிவா 92 புள்ளிகள், சரப்ஜோத் சிங் 95 புள்ளிகள் பெற்றனர். தொடர்ந்து, அடுத்தடுத்த தொடரில், இந்திய அணி மொத்தம் 1,734 புள்ளிகளை வென்று தங்க பதக்கமும் கைப்பற்றியது. போட்டியில், சீனா வெள்ளி பதக்கமும், வியட்னாம் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. போட்டியில், சரப்ஜோத் சிங் 580 புள்ளிகள், அர்ஜுன் 578 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 5-வது மற்றும் 8-வது இடம் பிடித்து தனிநபர் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
6-வது நாளாக இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
