சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசியப்போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
இந்த போட்டியில் இன்று காலை வரை இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் கால் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பிவி சிந்துவும் சீனாவின் ஹி பிங்ஜியோவும் மோதினர். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்று பேட்மிண்டனின் முன்னணி வீராங்கனையாக திகழும் சிந்து எப்படியும் பதக்கம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
