ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. 7வது நாளான இன்று வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. . இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, பிரவீன் ஓஜாஸ் ஆகியோர் வில்வித்தை இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் 2 பேரும் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி உறுதியானது. இன்று காலை நிலவரப்படி இந்தியா 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் பெற்று தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளது. உஸ்பெகிஸ்தானும் 13 தங்கம் வென்று 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி வரும் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.