சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா – வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.