ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இலங்கை வீரர் துனித் வெல்லாலகாவின் சுழலில் சிக்கி இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 50 ஓவர் முடிவில் இந்தியா 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெல்லாலகா 5 விக்கெட், அசரங்கா 4 விக்கெட், தீக்ஷனா 1 விக்கெட் எடுத்தனர்.
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். இன்றைய போட்டியில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.