Skip to content
Home » ”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

  • by Senthil

தி கிரேட் இந்தியன் கிச்சன்  மலையாளத்தில் வெற்றிப்பெற்றது. இப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது. தமிழில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்திருக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  இன்று வௌியானது.  இப்படம் பிப்ரவரி 3ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் இன்று வௌியிட்டுள்ளனர். இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி,

 

தயாரித்துள்ளார்.  இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், வசனகர்த்தாவாக சவரிமுத்து மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார், எடிட்டராக லியோ ஜான் பால், கலை இயக்குநராக ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!