தமிழ் சினிமாவில் நகைச்சுவை, காதல், ஆக் ஷன் என அனைத்து ஜானரிலும் நடித்து வருபவர் ஆர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் உடம்பை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்கில் காட்சி அளித்தார் ஆர்யா. அப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு பெரிய லிஃப்ட்டையும் கொடுத்தது. அதன்பிறகு கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா. இந்நிலையில், கெளதம் வாசுதேவ் மேனன் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கத்தில், ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆர்யா.
அந்த பதிவில், ‘ ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் கதையை கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி செய்தேன். ஏப்ரல் மாதம் முதல் படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டோம். செப்டம்பரில் ஷூட்டிங் சென்று விட்டோம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இப்படத்திறாக ஓராண்டாக பணிபுரிந்து வருகிறோம். என்னுடைய இலக்கை அடைய ஒரு வருடம் ஆகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.
அவர் பதிவிட்டிருக்கும் போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வரும் ஆர்யா ரசிகர்கள், ‘இதுவல்லவா மாற்றம்… உழைப்பு’ என்று பாராட்டி வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்தும் ஆர்யா, அடுத்து ’சார்பட்டா பரம்பரை 2’ படத்திலும் நடிக்க உள்ளார்.