தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வி கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: .. தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் ஊராட்சியில் நடுப்பட்டி வரை தற்போது நகர பேருந்து வருகின்றது. சில நாட்கள் காலதாமதமாக வருகின்றது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மதியம் 2.30 மணியில் இருந்து 3 மணிக்குள் கூடுதலாக ஒருமுறை நகரப் பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நேரத்தில் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதலாக ஒரு முறை பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.