பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று எம்.பி. அருண் நேரு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், கோவிட் நோய்த்தொற்று காரணமாக பெரம்பலூர் தொகுதி்யில் பெற்றோரை இழந்த 1,431 குழந்தைகளுக்கு (Vatsalya Mission)
திட்டத்தின் மூலம் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
வத்சல்யா மிஷன் திட்டம் என்பது ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் பராமரிப்புக்காக வழங்கப்படும் நிதி உதவி. இந்த திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி உதவி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.