அமைச்சர் கே. என். நேருவின் மகன் தொழிலதிபர் அருண் நேரு. இவர் ெபரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடப்போகிறார் என்ற செய்தி கடந்த சிலமாதங்களாக நிலவி வருகிறது. பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் பல கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. இந்த நிலையில் அருண் நேருவிடம் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என இன்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அருண் நேரு, மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன். நான் போட்டியிடுவது குறித்தும், பெரம்பலூரா, திருச்சியா? எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்’ என்றார்.