பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு விருப்ப மனு அளித்துள்ளார். அருண்நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப்பொதுச்செயலாளருமான எம்பி ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலதிபர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்..
