தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.4.2025) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்ட தொடக்க விழாவில், கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகளால் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, .எஸ்.ஆர். ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் .கொ. வீர ராகவ ராவ், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல. நிர்மல்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், ஆகியோர் உடனிருந்தனர்.
