குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்ததில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளிக் குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது கரூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழை நீர் அதிகளவு தேங்கியுள்ளது. வடிகால் வசதி இல்லாததால் மாணவர்கள் புத்தகப் பையுடன் மழை நீரில் நடந்து செல்கின்றனர். இன்று காலை சிற்றுண்டி உணவருந்தி விட்டு பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த நீரில் நடந்து சென்று வருகின்றனர். இதனை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.