அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் கலை இயக்குநர் மிலன் (54) மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலை இயக்குநராக மிலன் பணியாற்றிவருகிறார். நேற்று இரவு ஷூட்டிங் முடிந்துவிட்டு ஓட்டலுக்குச் சென்ற மிலன், மீண்டும் இன்று காலை படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்றார். திடீரென நெஞ்சுவலி இருப்பதாக மிலன் கூறியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இது குறித்த தகவலை அறிந்த நடிகர் அஜித், டைரக்டர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்த போது மிலன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விடாமுயற்சி சூட்டிங்கில் இருந்த ஆர்ட் டைரக்டர் மிலன் காலமானார்..
- by Authour
