Skip to content

கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

  • by Authour

 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் என்ற கிராமத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய  5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தலைவலி, மயக்கம், வாந்தி, கண் மங்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு  மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து உள்ளனர்.

அமைச்சர்கள் பொன்முடி,  மஸ்தான் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு ஆநுதல் கூறினர்.

தகவல் அறிந்ததும் சாராயம்  விற்ற நபர் தலைமறைவாகி விட்டார்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சித்தைலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!