கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை, ஏ.ஜி. சம்பத், கார்த்தியாயினி, கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் அருள் மற்றும் பலர் இன்று காைல 11.30 மணி அளவில் சந்தித்து கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து புகார் மனு அளித்தனர்.