கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் வழங்கப்பட்டு உள்ளது. இதைக்குடித்தவர்கள் 20ம் தேதி முதல் பலியாகத் தொடங்கினர். சுமார்1 50 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி் சேலம் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 57 ஆக இருந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் என்பவர் இறந்தார். இதனால் பலி 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
