Skip to content

சாராய சாவு 50 ஆனது…. 30 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

  • by Authour

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி பலர்  குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். அங்கு ஒரு துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு விஷ சாராயம் வழங்கப்பட்டு உள்ளது. ஓசியில் கிடைத்ததால் அனைவரும் வாங்கி குடித்து உள்ளனர். இதனால் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை40 ஆன நிலையில் இன்று  சாவு எண்ணிக்கை 50ஆனது.

இந்த நிலையில்  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த்  இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை 27 பேரின் டும்பத்துக்கு  வழங்கப்பட்டு உள்ளது.  மற்றவர்களுக்கு இன்று மதியத்த்தி்ற்குள் வழங்கப்பட்டு விடும்.  கள்ளசாரம் குடித்த வடமாநிலத்தை சேர்ந்தவருக்குை் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடு்பத்தினர் கலெக்டர் அலுவலகம் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்ப சூழல்நிலை மற்ற விவரங்கள்  அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான மருந்துகளும் தேவையான அளவு இருப்பு உள்ளது.  மருத்துவமனையில் 118 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்  30 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *