கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளசாராயம் குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். போதைக்காக சாராயத்தில் மெத்தனால் என்ற ரசாயனத்தை கலந்து விற்றதால் இந்த சோக முடிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, புதுவை , விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலரின் நிலைமை மோசமாக உள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் சி.பி.சி.ஐ. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கருணாபுரத்திற்கு நேரி ல் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமைவிசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.