அரியானா ரேத்தாக் பல்க லைக்கழகத்தில் அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற் றனர். போட்டியில் எம். டி. ரோத்தா பல்கலைக்கழக அணி முதல் பரிசையும், ஜி. கே. யு. டி. பல்கலைக்கழக அணி 2 -ம் பரிசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை எஸ். ஆர். எம். பல்க லைக்கழக அணி 3 -ம் பரிசும் பெற்றுள்ளன. இதில் எஸ். ஆர். எம். பல்கலைக்கழக கபடி அணியின் கேப்டனாக லால்குடியை அடுத்த நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்த நவீன் பங்கேற்று விளையாடினார். இவர் ஜெயபால்-எழிலரசிதம்பதியின் மகன் ஆவார். நவீன் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பள்ளியில் நடை பெற்ற விளையாட்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். தற்போது, அவர் சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. முதலாம்ண்டு படித்து வருகிறார். அகிலஇந்திய பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கபடி போட்டியில் சாதனை படைத்த மாணவர் நவீனை லால்குடி பகுதி சமூக ஆர்வலர் கோமாக்குடி ஆசைதம்பி மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.