திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் வயது (56) இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பினார் பின்னர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மகன் தீனதயாளன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சியில் இரண்டு கல்லூரி மாணவிகள் தனது காதலர்களுடன் ஓட்டம் போலீசார் விசாரணை….
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் வீதி 6வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகள் காவியா வயது (19) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பினார். பின்னர் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வள்ளி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி காவியாவை தேடி வருகின்றனர் இதற்கிடையே காதல் வலையில் சிக்கிய காவ்யா ஹரிகரன் என்ற வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் ரெண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
இதைப் போன்று மேல கல்கண்டார்கோட்டை அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த முகமது சையது மகள் ஜனத்துள் பிரிட்டோஸ் என்ற கல்லூரி மாணவியையும் காணவில்லை இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார் இவரும் திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அந்த மாணவி வீட்டில் இருந்த ரூபாய் 4000 பணம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமுறைவானார் ஆகவே அவர் காதலுடன் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.