வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இன்று திருச்சி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 09 கட்டடங்களை திறந்து வைத்தும், ரூபாய் 12.91 கோடி மதிப்பீட்டில் 03 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், விலையில்லா வீட்டுமனை
பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூபாய் 27.90 கோடி மதிப்பீட்டில் 2,539 பயனாாளிகளுக்கு வழங்கி விழாப் பேருரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்,, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அபிராமி, ஆவின் பொது மேலாளர் முத்துமாரிதேவி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சரண்யா, மாநகராட்சி துணை மேயர். திவ்யா, மண்டலத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.