அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையேற்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள். அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.ரவி சேகரன் மற்றும் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ப.மணவாளன் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான காவல்துறையினர் மிடுக்கான உடையில் , வான் முட்டும் சத்தத்துடன் சீர்மிகு நடையில் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதில் 250 க்கும்
மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆயுதப்படை போலீசாருக்கு 15 நாட்கள் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நடைபெறும். இந்த ஆண்டு 19.01.2023 முதல் 06.02.2023 ஆகிய நாட்களில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி,கவாத்து பயிற்சி , ஆயுதப் பயிற்சி,முதல் உதவி வகுப்பு, தீயணைப்பு வகுப்பு, தற்காப்பு பயிற்சி மற்றும் யோகா பயிற்சி முதலியவை அளிக்கப்பட்டன .