அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்
நவநீதகிருஷ்ணன் பெற்றோர்களிடம்கூறி கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் மீண்டும் அந்த மாணவியின் முதல் எழுத்தையும், தன்னுடைய பெயரை கிருஷ்ணன் என்று கூப்பிடுவதால் அதில் உள்ள முதல் எழுத்தான கே யுடன் சேர்த்து கே.எஸ் என எடிட்டிங் செய்து குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் அந்த மாணவியின் முகத்தை ஹார்ட்டில் வைத்து டிசைன் செய்து அதை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து, தான் பயன்படுத்தி வரும் குரூப்பில் பதிவிட்டுள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மாணவி, பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் நவநீதன் வீட்டுக்கு சென்று கண்டித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் மாணவியின் வீட்டுக்கு சென்று உங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மாணவியின் எதிர்காலத்தை அழித்து வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவேன் என மிரட்டி, தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் நவநீதகிருஷ்ணனை அழைத்து செல்போனில் உள்ள பதிவுகளை பார்த்து உறுதி செய்ததுடன் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்