அரியலூர் மாவட்டம், வில்லகம் கிராம பகுதியில் வசிப்பவர் ஆல்வின் பெல்லா மின் வயது 24 சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் ஆல்வின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இது தொடர்பாக ஆல்வின் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்கிடமான 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்திய போது கௌதம் (22) திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அப்துல் ஹக்கீம் (28) கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.