அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 5.11.2021 அன்று சுரேஷ்குமார் தனது குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, வீட்ல இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மனைவி அனிதாமீது ஊற்றி எரித்துள்ளார். சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அனிதா சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் உயிரிழந்தார்.
இதனையடுத்து வெங்கனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 15000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார், சுரேஷ்குமாரை பாதுகாப்புடன் அழைத்து சென்று, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
