அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(50). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை தனது தாயை காணவில்லை என மகன் முத்துச்சோளம் பயிரிட்டுள்ள விவசாய நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது அன்னபட்டு தலையில் பலத்த ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து
கீழப்பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்னபட்டு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். உடல் பிணப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கொலை செய்யப்படுவதற்கு முன் அவர் பாலியல் உறவு கொண்டதற்கான தடயங்களும் இருந்ததாக தெரியவந்தது. எனவே அன்னப்பட்டுவின் போனை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று ஒரு சிமெண்ட் ஆலை ஊழியர் பாலமுருகன் அன்னப்பட்டுவிடம் பேசி உள்ளார். அவரைப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கொலையை ஒத்துக்கொண்டார்.
சம்பவத்தன்னு மதியம் அன்னப்பட்டுவை சோளக்காட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் வெட்டிக்கொலை செய்ததாகவும் கூறினார். பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.