அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறை சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சிறிது தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில், உடல் தானம் செய்வதற்கான
வழிமுறைகள், அதற்கான விதிகள், உடல் தானம் செய்யும் போது வழங்க வேண்டிய ஆவணங்கள், ஒருவரது உடல் தானம் பலரது உயிரை காப்பாற்றும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் பல்வேறு தன்னார்வல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.