அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினம்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகாபாரத கதை பாடப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. திரௌபதி அம்மனுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் தர்மர் சகோதரர்களும் திரெளபதி அம்மனும் கோவிலில் எழுந்தருளி யதை
தொடர்ந்து, நாதஸ்வர இசை, சென்ட்டை மேளம் முழங்க, காப்பு கட்டி விரதம் இருந்த, தீமிதிக்கும் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஒவ்ஙொருவராக மெல்ல அக்னியில் நடந்து சென்றது பொதுமக்களை பரவசப்படுத்தியது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க செந்துறை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . செந்துறை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து தீமிதி விழாவையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.