சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே
எனக்கு வாக்குகளியுங்கள் எனக்கூறினார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், பிரச்சார வாகனத்திற்கு முன்பு வந்து, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து,
பேசாதே வாயை மூடு!..
வாயை மூடுமா எனக்கூறி கூட்டத்துக்கு முன்பு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பூமிநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதேசமயம் பிரச்சாரத்தை ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார். அராஜகம் செய்யும் சமுதாயம் இந்த சமுதாயம்.
இதனால் தான் மற்ற சமுதாயத்தினர் நம்மளை மதிப்பதில்லை. நான் நான் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த பெண். உங்களிடம் நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இந்த சமுதாயத்தில் ஒரு தொழிலதிபர் உள்ளரா. ஆண்டு ஆண்டுகாலம் கையை கட்டிதான் நிற்கிறோம் என கூறினார்.
மேலும் திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு செல்லாத வாக்கு. அது மழை நீர் வீணாக கடலில் கலப்பது போன்றது. எனக்கு வாக்களித்தால் மோடி அய்யாவிடம் பேசி ஒவ்வொரு கிராமத்திலும் பெண்கள் முன்னேற 10 லட்சம் இருந்து 50 லட்சம்வரை உதவிநிதி உள்ளது. இது உங்களுக்கு தெரியுமா? என்னை தேர்ந்தெடுங்கள் என பிரச்சாரத்தில் பேசினார். பின்னர் அக்ராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு சென்று தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.