அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35. இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7 ஆம் தேதி கொளுத்தப்பட்ட குப்பையில் அன்று இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்று கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்து புகாரின் பேரில் செந்துறை போலீஸ் பொருப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது திவ்யாவை பிடித்து விசாரணை செய்த போது தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை கொளுத்தி கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடிக்கி பிடி விசாரணை மேற்கொண்டார். அப்போது மதிவண்ணன் தனது மனைவி கற்பமானதை மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார் இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது அப்போது அந்த குழந்தையின் முகம் மட்டும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன் இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன் இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார். இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு எடுத்து விட்டு வந்து விட்டோம் ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலை ஊர் மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.
போலீசார் நடத்திய கிடிக்கி பிடி விசாரணையில் இந்த கொடூர கொலை அம்பலம் ஆனது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
