அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் வடக்குப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 185 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடு உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் தைலம் மரங்கள் எரிந்து நாசமாகின.தொடர்ந்து தீ எல்லா இடங்களிலும் பரவி மளமளவென எரிந்தது. ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில்
ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். தைல மரக்காட்டில் ஏற்பட்ட தீ இயற்கையாக நடந்ததா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.