அரியலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்(பொ) செந்தில் குமார் அவர்களது அறிவுறுத்தலின் படி
பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர்
சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொ) வகீல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். கீழப்பழூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட பணியாளர்களுக்கும் கீழப்பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கும், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு வழங்கி டெங்கு உறுதி மொழி எடுக்கப்பட்டது. “டெங்கு காய்ச்சலை ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் பரப்புகின்றன. இவ்வகை கொசுக்கள் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, தண்ணீர் தேங்கி வைக்கும் சிமெண்ட் தொட்டி போன்ற நன்னீரில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. ஆகவே, வீட்டிலுள்ள நீர் தேங்கி வைக்கும் இடங்களை முன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து வைக்க வேண்டும்” என தெரிவித்தார்கள். மேலும்,
சிறப்பான முறையில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் நரேந்திரன், பணித்தளப் பொறுப்பாளர்
திருமதி கவிதா, மக்கள் நல பணியாளர் கலியபெருமாள் ஆகியோர் மேற்கொண்டார். அரியலூர்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் , பயிற்றுநர்கள் மற்றும் நிலைய மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர்.