அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் முகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கொடி மரத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கொடி ஏற்றி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவானது 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதில் கணக்கு விநாயகருக்கு சாந்தி கோபம், வாஸ்து ஹோமம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 9 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள், அபிஷேகம் சுவாமி,
வீதியுலா, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் 10 ஆம் நாள் நிகழ்வாக தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பதினோராம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ அம்பாள் உற்சவம் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை சோழீஸ்வரர் ஸ்ரீ பாத குழுமம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தர்கள், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.