Skip to content

5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

 

அரியலூர் வடக்கு திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(41. )அரியலூர்
அருகே உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மாலையில்  வீடு திரும்பியபோது  அவரது  மார்பு பகுதியில் காயம் இருந்ததை கண்ட அவரது தாயார் சந்தேகப்பட்டு மாணவியிடம் விசாரித்த பொழுது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ராஜீவ் காந்தி கடந்த ஏழாம் தேதி மாடிப்படியில் இருந்து இறங்கும் பொழுது தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதனையடுத்து மறுநாள் எட்டாம் தேதி மதிய உணவு முடிந்தவுடன் ஆசிரியர் ராஜீவ் காந்தி தனது டிபன் பாக்ஸை ஆசிரியர் அறையில் வைக்க கூறினார். ஆசிரியர் அறைக்கு சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதை வெளியில் கூறினால் தன்னை கொலை செய்து விடுவதாகவும், வீட்டை தீவைத்துக் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவயின் தாயார் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இயற்பியல் ஆசிரியர் ராஜீவ் காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரியலூர் நகரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!