அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையில் நேற்று இரவு பணி முடிந்து சேல்ஸ்மேன் சுப்பிரமணியன் விற்பனை பணம் 2 லட்சத்து 23 ஆயிரத்தை லாக்கரில் வைத்து பூட்டி சாவியை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை டாஸ்மார்க் கடையில் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள் விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தார். சேல்ஸ்மேன் சுப்ரமணியன் கடைக்கு வந்து பார்த்தபோது நேற்று விற்பனையாகி லாக்கரில் வைத்திருந்த 2 லட்சத்து 23 ஆயிரம் பணத்தை காணவில்லை மேலும் மதுபான பானங்களும் காணவில்லை என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள இருந்த சிசிடிவி கேமராவை கொள்ளையர்கள் துணியை வைத்து மூடி வைத்தும், இன்னொரு கேமராவை உடைத்தும், இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.