அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் ஊர்வலமாக சொர்க்கவாசலுக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சொர்க்கவாசல் கதவுதிறந்து ஸ்ரீசீனிவாசப்பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சியளித்தர். இதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி ஸ்ரீசீனிவாப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர்.
பின்னர் பொதுமக்களும் சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனின் அருளாசியை பெற்றனர். இதனையடுத்து பெருமாள் கண்ணாடி சேவை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழுங்க நம்மாழ்வாருடன், ஸ்ரீசீளிவாசப்பெருமாள் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், பள்ளியக்ரஹாரம் மணி குன்ற பெருமாள் கோயில் உட்பட தஞ்சை பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.