அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக தொடக்கமாக நேற்று மாலை பட்டாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதனையடுத்து யாக வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்தது. இதனையடுத்து அருள்மிகு சுப்பிரமணியர் கோவில் கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க
புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனையடுத்து வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.