அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராம நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலுக்குகுடமுழக்கு செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்
தொடர்ந்து மூன்று கால யாகபூஜைகள் நடைபெற்று, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கோவில் விமான
கலசத்திற்கு புனித நீரை பட்டாச்சியாளர்கள் ஊற்றினர். திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு அபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் கிராம மக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.