அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த கா.பெரோஸ்கான் அப்துல்லா
விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு போலீஸ் அகடாமி ஊனமாஞ்சேரியில் நிர்வாகப் பிரிவில் துணை இயக்குனராக பணியாற்றிய
ச.செல்வராஜ் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று 13-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்ட காவல்துறையை அணுகும் மக்களின் பிரச்சினைகளை சட்ட வழிமுறைகளின் படி உடனடியாக தீர்வு காண அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்தல், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, மற்றும் போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட குற்ற செல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்புக்காவல் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண்டிகை கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்கள் மற்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.