அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 11 ம் தேதி காணப்பட்ட சிறுத்தை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தை விட்டு பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுத்தை கடந்த 12 ஆம் நின்னியூர் கிராமத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சென்றபோது கால் தரம் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள சின்னாறுஓடை பகுதிகளில் சிறத்தையை பிடிக்க குண்டு வைத்து தேடி வந்தனர்.
மேலும் இதே கூண்டை மூன்று முறை இடமாற்றி வைத்து தேடிப் பார்த்ததில் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை.
மேலும் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட நிலையில் அதிலும் சிறுத்தை தென்படவில்லை.
எனவே அரியலூரில் காணப்பட்ட சின்னாறு ஓடை, ஆணைவாரி ஓடை, வெள்ளாற்று மூலமாக இடம்பெயர்ந்து
இருக்கலாம் எனவும் எனவே இந்த மூன்று நீர்வழிப் பாதையின் மூலமாக சிறுத்தை இடம் பெயர்ந்தால் மேற்கில் சென்றிருந்தால் பெரம்பலூர் எனவும் வடக்கில் சென்றிருந்தாரல் கடலூர் மாவட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.
இந்த கணிப்பு உடுமலை , பொள்ளாச்சியில் இருந்து வந்த வனத்துறை மற்றும் வனத்துறை மருத்துவர்கள் கணித்துள்ளனர்.இவர்கள் ஏற்கனவே எற்கனவே சிறுத்தை பற்றி நன்று அறிந்தவர் அவர்கள் இது போல கூறியுள்ளனர்.
எனவே அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த ஆற்றின் படுகைகளில் தேடுதல் பணி ஈடுபட கூறியுள்ளோம் என அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.