தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு 987 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சு.ஜெயா, திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி திருமானூர் ஆண்கள்- 62, பெண்கள்- 47, கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 34, பெண்கள்- 34, திருமழாப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 24, பெண்கள்- 16, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 70, பெண்கள்- 101, கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 21, பெண்கள்- 28, காமரசவள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 18, பெண்கள்- 23, குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 38, பெண்கள்- 38, த.பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 48, பெண்கள்- 32, த.கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 30, பெண்கள்- 22, நடுவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள்- 185, பெண்கள்- 116, மாணவர்களுக்கு 530 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 457 மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது.
அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…
- by Authour
