அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் அரியலூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஆய்வு செய்த குழுவினர் அரியலூர் மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டிருந்தனர் மேலும் மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் ஆய்வு செய்த குழுவினர் நுண்ணுயிர் தொலைநோக்கியின் செயல்பாடு அதன் பயன்கள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். இதனை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, உழவர் சந்தை வாரணவாசியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் திறந்தவெளி அருங்காட்சியகம் கீழப்பழுவூரில் உள்ள இ சேவை மையம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த குழுவினர் அதன் செயல்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை இ கேட்டறிந்தனர் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
