அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் பந்தயம் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.
25.02.205 இன்று காலை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பாக அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் தொடங்கியது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமை தாங்கி கொடியசைத்து மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரகுபதி(அரியலூர் உட்கோட்டம்), அருள்முருகன்(மாவட்ட ஆயுதப்படை), அரியலூர்
மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி லெனின், காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன் (அரியலூர் நகர காவல் நிலையம்) மற்றும் கார்த்திகேயன் (அரியலூர் போக்குவரத்து காவல் நிலையம் & பொறுப்பு மாவட்ட ஆயுதப்படை)உடன் இருந்தார்கள்.
Under 15, under 17, under 25, above 25 என பல்வேறு வயது பிரிவினரின் கீழ் நடைபெற்ற போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் பலர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பந்தயம் மாவட்ட விளையாட்டு அரங்க முன்பாக தொடங்கி, செந்துறை ரவுண்டானா வழியாக பல்வேறு படிநிலைகளில் டால்மியா சிமெண்ட் ஆலை வரை நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச், பதக்கம் அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினார்கள்.
போட்டியில் 25 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் நான்காம் பரிசு பெற்றார். மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் ஊக்க பரிசு பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.