Skip to content
Home » அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி விவசாயி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். அவர் சாந்திக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். சாந்தியின் தம்பி சந்திரசேகர் பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த ராஜிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்தராஜ் பங்கு சந்தை வர்த்தகம் செய்து பணத்தை இரட்டிப்பு செய்துள்ளார்.

இதனால் அவரை நம்பி 6 சதவீதம் வட்டிக்கு பணத்தை சாந்தி கொடுக்க தொடங்கியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணம் கொஞ்சம்‌ கொஞ்சமாக கொடுத்துள்ளார். தொடர்ந்து மொத்தமாக 5 கோடியே 34 லட்சம் கொடுத்துள்ளார். இதற்க்கு இரண்டு மாதத்திற்க்கு சுமார்‌ 68 லட்சம் வட்டியாக ஆனந்த ராஜ் திருப்பி கொடுத்துள்ளார்.
அதன் பிறகு வட்டி பணம் தரவில்லை அசல் பணத்தையும் திருப்பி தரவில்லை. பல முறை பணம் கேட்டும் தராததால் இது குறித்து சாந்தி அரியலூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனந்த் ராஜ் சாந்தியிடம் வாங்கிய பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் பங்கு சந்தை ஆன்லைன் வர்த்தகங்களில் முதலீடு செய்ததாக தெரிய வருகிறது. இதில் சில அதில் இழப்பு ஏற்பட்டதால் பணம் தர முடியவில்லை என போலீசார் விசாரணையில் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் ஆனந்த ராஜை கைது செய்து சென்னையில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு அவரது வங்கி கணக்கை முடக்கி சொத்தை முடக்கி நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்துள்ளார் சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!